
மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு
இந்த நிலையில் சிம்ரன் தனது திரை பயணம் ஆரம்பித்தது குறித்து கூறும்போது, “தமிழில் நான் படங்களில் அறிமுகமாவதற்கு முன்பாக மலையாளத்தில் தான் அறிமுகமானேன். மம்முட்டியுடன் இந்திர பிரஸ்தம் என்கிற படத்தில் நடித்தேன். மலையாளத்தில் நான் நடித்த ஒரே படமும் அதுதான். இங்கே தமிழில் டெல்லி தர்பார் என்கிற பெயரில் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நடித்தது மறக்க முடியாதது. சமீபத்தில் கூட அவருடைய பஷுக்கா திரைப்படம் பார்த்தேன். இன்று வரை அவர் மாறவே இல்லை. என்னுடைய தம்பி சுமித்தும் இந்த படத்தில் நடித்திருந்தார். மம்முட்டியை பொறுத்தவரை அவர் ஒரு ஐகானிக் நடிகர். ரஜினி சாரை போல அவரும் எங்களைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!