
பிரபாஸ் நடிக்கும் பௌசி வெளியீடு தள்ளி வைப்பு
இந்த வருடம் டிசம்பர் 3ம் தேதி இப்படம் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் அறிவித்துள்ளார். நானி நடித்து வெளியாக உள்ள "தி பாரடைஸ்" படத்தின் விழாவில் கலந்து கொண்ட போது இது பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
“அது வேற லெவல் சினிமா, தயாரிப்புப் பணிகள் கொஞ்சம் தாமதமாவதால் படத்தின் வெளியீட்டை சற்றே தள்ளி வைக்கிறோம். "பாகுபலி" படத்திற்குப் பிறகு பிரபாஸை இப்படியான ஒரு தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள். பிரம்மாண்டமான ஒரு படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை வாழ்நாள் முழுவதும் கொண்டாடுவீர்கள்” என தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!