
பழைய பிகினி புகைப்படங்களை வெளியிடும் பூஜா ஹெக்டே
மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இரண்டு புகைப்படங்களுக்கும் சேர்த்து 20 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளார். சில பிரபலங்களும் அப்புகைப்படங்களுக்கு லைக்குகளைக் கொடுத்துள்ளனர்.
பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த "ராதேஷ்யாம்" படம் கடந்த வாரம் பொங்கலுக்கு வெளிவந்திருக்க வேண்டிய படம். கொரானோ அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புள்ள நிலையில், படம் வெளிவந்த பின் பூஜாவின் மார்க்கெட் இன்னும் உச்சத்திற்குச் செல்லும் என திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூஜா நடித்துள்ள "பீஸ்ட்" படம் வெளிவந்தால் இங்கும் முன்னணி நடிகையாக உயர வாய்ப்புள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!