
ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுலா சென்ற பூஜா ஹெக்டே
ஹங்கேரி நாட்டின் அழகிய புடாபெஸ்ட் நகரில் விடுமுறையைக் கழித்து வரும் பூஜா ஹெக்டே, அங்கிருந்து எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். புடாபெஸ்ட் நகரின் அழகான வீதிகளில் உலா வருவது, நதிக்கரையில் ஓய்வெடுப்பது மற்றும் புத்தகக் கடைகளில் நேரத்தைச் செலவிடுவது என தனது ஜாலியான விடுமுறை நாட்களை பூஜா பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் பூஜா தனது தலைமுடியை குட்டையாக வெட்டி முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறியிருந்தார். அந்த புதிய தோற்றத்திற்கு பிறகு அவர் வெளியிடும் முதல் புகைப்படங்கள் இவை என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் கவனம் பெற்றுள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!