ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார்
செப் 27, 2023
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் இவர் நடத்திய இசை கச்சேரி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டதை விடவும் மிக அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதித்தார்கள். அதனால் கடும் நெருக்கடியும், சர்ச்சைகளும் எழுந்தது. போலி டிக்கெட்டுகள் மூலமும் பலரும் விழாவுக்கு போனதும் மற்றொரு காரணமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியால் ரஹ்மான் மீது கடும் அதிருப்தி நிலவியது.
இந்நிலையில் இவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், 2018ல் நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மானின் இசை கச்சேரி நடக்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதுதொடர்பாக ரஹ்மானுக்கு ரூ.29.50 லட்சம் பணமும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அப்போது அந்த நிகழ்ச்சி திடீரென ரத்தாகிவிட்டது. அதன்பின் ரஹ்மான் அந்த பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது பணத்தை திரும்ப பெற்று தர வலியுறுத்தி ரஹ்மான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஹ்மான் தரப்பு விளக்கம்
இதுபற்றி ரஹ்மானின் உதவியாளர் செந்தில் வேலன் அளித்துள்ள விளக்கத்தில், ‛‛நிகழ்ச்சி ரத்தானால் பணத்தை திருப்பி தர வேண்டாம் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது"" என தெரிவித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!