ஆக., 31ல் ‛பிசாசு 2 ரிலீஸ்
ஜூலை 13, 2022
Advertisement
‛பிசாசு" படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛பிசாசு 2". பூர்ணாவும் முக்கிய டேத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். முதல்பாகத்தை போன்று இந்த படமும் திரில்லர் பாணியில் தயாராகி உள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகிறது. ஆண்ட்ரியாவே முதன்முறையாக தெலுங்கில் தனது குரலில் டப்பிங் பேசி உள்ளார்.
இந்நிலையில் இந்த படம் வருகிற ஆக., 31ல் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‛‛முழு முதற் கடவுள் விநாயகரின் ஆசியோடு விநாயகர் சதூர்த்தி ஆகஸ்ட் 31 அன்று உங்கள் அபிமான திரையரங்குகளில் பிசாசு2 உலகமெங்கும் வெளியாகிறது"" என தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!