
பிரபுதேவாவின் பேட்ட ராப் பர்ஸ்ட் லுக் வெளியீடு
பிப் 15, 2024
நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனரான பிரபுதேவா நடித்து சமீபகாலத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது இயக்குனர் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் "பேட்ட ராப்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் வேதிகா, ரியாஸ்கான், மைம் கோபி, பக்ஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பேட்ட ராப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் பிரபுதேவா, வேதிகா இருவரும் துள்ளல் நடனம் ஆடுவது போன்று வெளியிட்டுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!