
கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நின்றதால், கொலை, பாலியல் மிரட்டல்: பார்வதி
ஜூன் 15, 2026
Advertisement
கடந்த 2017ம் ஆண்டு மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழகில் திலீப் உள்ளிட்ட சிலர் விடுதலை செய்யப்பட்டனர் சிலர் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நின்ற நடிகைகளில் மஞ்சு வாரியரும், பார்வதியும் முக்கியமானவர்கள். கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நின்றதால் நான் பாலியல் மற்றும் கொலை மிரட்டலுக்கு ஆளானேன் என்று பார்வதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தற்போது பேசியிருப்பதாவது: 2017ல் கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு எனது திரைப்பயணத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. நான் ஒன்றும் பெரிய காரியத்தைச் செய்துவிடவில்லை. சிறிதளவேணும் அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட ஒரு நபர் செய்ய வேண்டிய மிக அடிப்படையான, கண்ணியமான விஷயத்தையே நான் செய்கிறேன்.
அதேவேளையில், இந்தப் பயணம் எளிதானதாகவும் இருக்கவில்லை. எனது வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும், எனது வலுவான குரல் காரணமாக என்னை ஒடுக்க அல்லது அழிக்க முயன்ற சக்திகள் என்னை கொலை மற்றும் பாலியல் அச்சுறுத்தல் செய்யும் அளவிற்கு வலிமையானவையாக இருந்த தருணங்கள் உண்டு. இருப்பினும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அடங்கிய வலுவான ஆதரவு வட்டம் எனக்கு இருப்பதால், அவர்கள் துணையாக நின்று என்னை முன்னோக்கிச் செல்ல வைக்கிறார்கள். என்னைக் காக்க ஒரு பாதுகாப்புக் கவசமாக ஒன்றிணைந்து நின்ற பெண்களின் சமூகம் ஒன்றும் எனக்கு இருந்தது.
எனது அரசியல் நிலைப்பாடுகள் என் திரைப்பயணத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. பெரிய திரைப்படங்கள் உட்பட பல வாய்ப்புகள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் படங்கள் எனக்குரியவை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சியை எனது 20 ஆண்டுகால அனுபவம் எனக்கு வழங்கியுள்ளது. என்று கூறியுள்ளார் பார்வதி.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!