
திரிஷா பற்றி குந்தவை கருத்து : வருத்தம் தெரிவித்த பார்த்திபன்
அதற்கு திரிஷா பதிலடியாக இன்ஸ்டா ஸ்டோரியில், "சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எனக்கு ஒரு தகவலைத் தெரிவித்தனர். ஒரு தனி நபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது உதவியாளர் மூலம் கடைசி நிமிடத்தில் எனது பெயரும் படமும் (அந்த நிகழ்ச்சியில்) சேர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர். ஒரு மைக்ரோபோன் (ஒலிபெருக்கி) கையில் இருப்பதால் மட்டும் ஒரு கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும். அறிவில்லாமல் பேசப்படும் தரமற்ற வார்த்தைகள், அவை யாரை நோக்கி பேசப்படுகிறதோ அவர்களை விட, அந்தப் பேச்சாளரைப் பற்றித் தான் அதிகம் வெளிப்படுத்தும்" என்று கூறியுள்ளார்
திரிஷா பதிவை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் அளித்த பதிலில், ‛‛எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை"" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!