
ஜூன் 5க்கு தள்ளிப்போன ‛பரிமளா அண்ட் கோ ரிலீஸ்
மே 26, 2026
Advertisement
‛பசங்க, மெரினா, தலைவன் தலைவி" என பல படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். தற்போது ஜெயராம், ஊர்வசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள "பரிமளா அண்ட் கோ" படத்தை இயக்கியுள்ளார். இதில் மிஷ்கின், சஞ்சனா, அனந்திகா, சாண்டி, யோகிபாபு, சிங்கம் புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ், தமிழ் குமரன் மற்றும் பசங்க புரொடக்சன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
அன்பும், சண்டையும் மிக்க குடும்பத்திற்குள் ஒரு கொலை நடந்து விடுகிறது. இந்தக் கொலையை யார் செய்தது என கண்டறியும் கதையில் தயாரான இப்படம் டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. மே 28ம் தேதி படம் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவித்து அதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டது. இந்த நிலையில், திடீரென ஜூன் 5ம் தேதிக்கு ரிலீசை தள்ளிவைத்து தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!