
ஜுனியர் என்டிஆருக்குத் தொடரும் பான் இந்தியா அந்தஸ்து
ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள "தேவரா" படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று ஐந்து மொழிகளில் யு டியூபில் வெளியானது. அதற்குள் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 24 மணி நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் இருப்பதால் புதிய சாதனையைப் படைக்கவும் வாய்ப்புள்ளது.
கடந்த வருடம் தெலுங்குத் திரையுலகத்தில் 600 கோடி வசூல் கடந்த படமாக "சலார்" படம் மட்டுமே அமைந்தது. தமிழில் "ஜெயிலர், லியோ" ஆகிய படங்கள் அமைந்தன. இந்த வருடம் தெலுங்கில் சில படங்கள் அந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் "தேவரா" படமும் ஒன்றாக இருக்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!