
படப்பிடிப்பில் ஜம்ப் பண்ணியபோது காலில் காயம் ; ஒரு மாதம் ஓய்வெடுத்த பத்மபிரியா
நவ 10, 2026
Advertisement
தமிழில் "தவமாய் தவமிருந்து, பொக்கிஷம்" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பத்மபிரியா. 2017க்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த பத்மபிரியா சமீப காலமாக மீண்டும் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் பத்மபிரியா படப்பிடிப்பின் போது மேலிருந்து கீழே குதிக்கும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தால் இதில் அவரது காலில் உள்ள தசைநார் பலத்த சேதம் அடைந்து மருத்துவ பரிசோதனையில் அவருக்கு காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தான் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் இந்த காயத்திலிருந்து உடல் ரீதியான மாற்றங்களிலிருந்தும் மீண்டு வருவது எளிதான காரியம் அல்ல என்றும் ஒரு தான் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் மனம் திறந்து கூறியுள்ளார் பத்மபிரியா. அதேசமயம் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்களது 21 வயதுக்குள்ளயே இது போன்று பலமுறை காயங்களை எதிர்கொள்கிறார்கள் என்று கூறி மருத்துவர்கள் தன்னை ஆசுவாசப்படுத்தினார்கள் என்பதால் பெரிதாக இது குறித்து நான் பயப்படவில்லை. இதனால்தான் சில காலம் சோசியல் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…