மே 8ல் ஒரே ஒரு படம்தான் ரிலீஸ்?
மே 05, 2026
Advertisement
2026ம் ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல் மாதம் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. மாதத்தின் கடைசி நாளான 30ம் தேதி தனுஷ் நடித்த "கர" படம் மட்டுமே வெளியானது. அந்தப் படம் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் சுமாராகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
தேர்தல் பரபரப்பு காரணமாக அதிகமான படங்கள் வெளியாகாது என்று சொல்லப்பட்டாலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட 19 படங்கள் வெளியாகின. அவற்றுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 86 ஆக இருக்கிறது.
மே மாதம் கோடை விடுமுறை முழுமையாக இருக்கும் என்பதால் இந்த மாதம் அதிகப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாதத்தின் முதல் வெளியீடாக "29" என்ற ஒரே ஒரு படம் தான் வெளியாகிறது.
அடுத்த வாரம் சூர்யா நடித்துள்ள "கருப்பு" படம் வெளியாக உள்ளது. வேறு எந்தப் படங்களும் குறிப்பிடும்படியாக அறிவிப்பை வெளியிடவில்லை. விஜய்யின் "ஜனநாயகன்" படம் இந்த மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!