
மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்: மனைவி, குழந்தைகள் ஆப்சென்ட்
அதன்படி, தமிழகத்தின் அடுத்த முதல்வராக விஜய் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. நாளை மறுநாள் (மே 7) விஜய் முதல்வராக பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சில அமைச்சர்களும் அன்றைய தினமே பதவியேற்க உள்ளனர். இதற்கான பட்டியலை தயார் செய்யும் பணிகளில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவியேற்பு விழாவில் விஜயின் பெற்றோர் இயக்குனர் சந்திரசேகர் - ஷோபா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். விஜயின் மனைவி சங்கீதா, மகளின் படிப்பிற்காக லண்டனில் இருப்பதால் அவர் விழாவிற்கு வரவில்லையாம், அதேபோல் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்கிய "சிக்மா" படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருப்பதால் அவரும் கலந்து கொள்ளமாட்டார் என்கிறார்கள். சமீபத்தில் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர்கள் விழாவை புறக்கணிக்க அதுவும் ஒரு காரணம் என்கின்றனர். ஆனால் விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!