
ஆகஸ்ட் 4ல், சிறிய படங்கள் மட்டுமே வெளியீடு
இந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர்" படம், செப்டம்பர் மாதம் "சந்திரமுகி 2, மார்க் ஆண்டனி", அக்டோபர் மாதம் "லியோ", நவம்பர் மாதம் "அயலான், ஜிகர்தண்டா 2, ஜப்பான்" டிசம்பர் மாதம் "கேப்டன் மில்லர்" என சில முக்கிய படங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றிற்கிடையில் எந்த வாரத்தில் கொஞ்சம் வழி கிடைக்கிறதோ அங்கு தங்களது படங்களை வெளியிட சிறிய படங்களின் தயாரிப்பாளர்களும், இரண்டாம், மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளவர்களும் வெளியிட்டாக வேண்டும்.
அடுத்த வாரம் "ஜெயிலர்" வர உள்ள நிலையில் இந்த வாரத்திலேயே குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வரவில்லை. “பிரியமுடன் ப்ரியா, சான்றிதழ், லாக்டவுன் டைரி, வெப், கல்லறை” ஆகிய படங்கள் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் "வெப்" படத்தின் நடிகரான "நட்டி" மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்த முகம். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் இந்த சிறிய படங்களுக்கும் ஆதரவு தருவார்களா என்பது யோசனைக்குரியது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!