
ஓம் புதிய ரிலீஸ் தேதி
அக் 02, 2026
Advertisement
"அமரன்" படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்து தனுஷை வைத்து "ஓம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 16ல் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவித்தனர். ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" படம் அக்.,15ல் ரிலீசாவதால் ஓம் படத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் நவம்பர் 20ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே தேதியில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள "சத்தியவான் சாவித்திரி" படமும் ரிலீசாகிறது.
இந்த நிலையில் நவம்பர் 20ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே தேதியில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள "சத்தியவான் சாவித்திரி" படமும் ரிலீசாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…