
அக்டோபர் 1, 2 வெளியீடுகள் : முன்பதிவில் முந்துவது யார் ?
இந்த நான்கு படங்களின் போட்டியில் ஒரு படத்திற்கு நேர்மறையான விமர்சனமும், மற்ற மூன்று படங்களுக்கு கலவையான, எதிர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. நேற்று, இன்று, நாளை என மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் இவற்றிற்கு ஓரளவிற்கு முன்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் கிடைக்கும் வசூல்தான் மிகப் பெரியது.
முன்பதிவைப் பொறுத்தவரையில் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள "பத்தா" படம்தான் முன்னணியில் உள்ளது. அதற்கடுத்து ""சிக்மா, அன்பில் அவன், ஏழு கடல் ஏழு மலை” ஆகிய படங்கள் உள்ளன.
கடந்த வாரங்களில் வெளியான, "டோரதி, மீசைய முறுக்கு 2, மண்டாடி,” ஆகிய படங்கள் இந்த வாரப் படங்களுக்கு சரியான போட்டியாக அமைந்துள்ளன.
இந்திய அளவில் பார்த்தால், ஹிந்திப் படமான "த்ரிஷ்யம் தி கன்க்ளுஷன்", ஆங்கிலப் படமான "அவஞ்சர்ஸ் என்ட் கேம் - என்கோர்" படங்கள் அதிக முன்பதிவில் உள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!