ஹூமா குரேஷி எழுதிய நாவல் வெளியீடு
டிச 05, 2023
பாலிவுட்டின் பிரபல நடிகை ஹூமா குரேஷி. தமிழில் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த வலிமை ஆகிய படங்களில் நடித்தார். தற்போது படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக ‛ஸெபா: அன் ஆக்சிடெண்டல் சூப்பர் ஹீரோ" என்ற நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இது பேன்டஸி கலந்த நாவல். 1992 முதல் 2019 வரை நடக்கும் கதை. கொரோனா காலக்கட்டத்தில் இதை எழுத தொடங்கினேன். வெப்சீரிஸாக எடுக்க நினைத்தேன், முடியவில்லை. என்றாவது ஒரு நாள் இது படமாகும். நடிப்போ, எழுத்தோ என் படைப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதை அதற்கான வாய்ப்பாக கருதுகிறேன்"" என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!