காதலிக்க நேரமில்லை…….. : மிருணாள் தாக்கூர்
ஏப் 16, 2026
Advertisement
"சீதா ராமம்" தெலுங்குப் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர். அவர் தற்போது சில ஹிந்தி, தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த வாரம் அவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த "டகாய்ட்" படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் நடிகர் தனுஷை மிருணாள் காதலிப்பதாக சமீபத்தில் பரபரப்பான கிசுகிசு வெளிவந்தது. அது குறித்து அவ்வப்போது மறுப்பு தெரிவித்து பேட்டி கொடுத்து வந்தார் மிருணாள். இந்நிலையில் "டகாய்ட்" படத்தின் புரமோஷன் பேட்டி ஒன்றின் போது மிருணாள் பேசுகையில், “தற்போது தனக்கு காதலிக்க நேரமில்லை,” என்று கூறி தன்னைப் பற்றிய காதல் கிசுகிசுக்கு மீண்டும் பதிலளித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர் தனுஷ். அவர்களுக்கு டீன் ஏஜ் வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் பற்றி அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் வருவதும் பின்னர் அவை அடங்கிப் போவதும் வழக்கம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!