எங்களுக்குள் போட்டியில்லை - சுபிக்ஷா
மார் 15, 2023
Advertisement
"கண்ணை நம்பாதே" படத்தில் நடித்து முடித்துள்ள சுபிக் ஷா கிருஷ்ணன், சந்திரமுகி 2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி: "கண்ணை நம்பாதே" படத்தில் அபர்ணா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன். "நேச்சுரல் லுக்"காகவே இயக்குனர் என்னை தேர்வு செய்தார். கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
"சந்திரமுகி 2" படத்திலும் கதை முழுக்க வரும் பாத்திரமாக இருந்தது. "நீ நடித்தால் சரியாக இருக்கும்" என இயக்குனர் கூறினார். "சந்திரமுகி" படத்தின் பெரிய ரசிகை நான். அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இயக்குனர் பி.வாசு, ராகவா லாரன்ஸ் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுடன் ஒரு குடும்பமாகவே பயணிக்கிறோம். இப்படத்திற்காக உடல் எடையையும் குறைத்தேன். இதற்கு ராகவா லாரன்ஸே காரணம். அவர் தரும் ஊக்கம் ஒட்டு மொத்த படக்குழுவுக்குமே செம எனர்ஜி.
நிறைய சக நடிகையருடன் நடிப்பதால் போட்டி அதிகம் இருக்கும் என நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஒருவருக்கொருவர் நிறைய கற்றுக் கொள்கிறோம். அடுத்ததாக தமிழிலும், ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!