பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன்
செப் 26, 2023
Advertisement
முன்னணி மலையாள நடிகை நித்யா மேனன். தமிழில் மெர்சல், இருமுகன், காஞ்சனா, 24, சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். கடைசியாக தனுசுடன் "திருச்சிற்றம்பலம்" படத்தில் நடித்தார். இதுதவிர கன்னடம் மற்றும், தெலுங்கு படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்த "மிஷன் மங்கள்" படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அபிஷேக் பச்சனுடன் "ப்ரீத் இன் டு த ஷெடோவ்ஸ்" என்ற வெப்சீரிஸில் நடித்தார்.
இந்நிலையில் விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் "மர்டர் மிஸ்டரி" என்ற ஹிந்தி படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார். இதில் விவேக் ஓபராய், ஆஷிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். ஒரு கொலையை சுற்றி நடக்கும் கதையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூத்த விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. இதற்காக நித்யா மேனன் அங்கு சென்றுள்ளார். அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…