
அடுத்த பெரிய ரிலீஸ் மாநாடு
இதற்கடுத்து நவம்பர் 25ம் தேதி சிம்பு நடித்துள்ள "மாநாடு" படம் வெளியாக உள்ளது. "அண்ணாத்த" படத்துடன் போட்டி போட்டு வெளியாக வேண்டிய படம். சில பல காரணங்களால் வெளியீட்டை தள்ளி வைத்தார்கள். "டைம் லூப்" என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. தீபாவளி படங்கள் சில பல ஏமாற்றங்களைத் தந்ததால் இந்த "மாநாடு" படம் அவற்றை மாற்றும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
முதல் முறையாக இணைந்துள்ள வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணி என்ன செய்திருக்கிறது என்பதைக் காண இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!