புதுமுகங்களின் காதல் கதை
மே 30, 2025
Advertisement
சூப்பர் ஸ்டார் பிலிம்ஸ் சார்பில் சமீர் அலி கான் தயாரித்து, இயக்கி நாயகனாக நடிக்கும் படம் "தமிழ் பையன் இந்தி பொண்ணு". மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படம் குறித்து சமீர் அலிகான் கூறியதாவது: திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு "காதல் மட்டும் வேணா" திரைப்படத்தை இயக்கி நடித்தேன். தற்போது "தமிழ் பையன் இந்தி பொண்ணு" படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை வேடத்திலும் நடிக்கிறேன்.
இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம், ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் " என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!