மத்தகம் வெப் தொடர் குறித்து புதிய தகவல்
ஆக 16, 2023
Advertisement
கிடாரி பட இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, ஜெய் பீம் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் "மத்தகம்". இதில் நிகிலா விமல், கவுதம் மேனன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த தொடரை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த தொடர் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே இதன் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 9 எபிசோடுகளாக இந்த மத்தகம் உருவாகி உள்ளது. இதன் கடைசி எபிசோடில் இரண்டாம் சீசனுக்கான புதிய கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறார்கள். முதல் சீசனின் வரவேற்பைப் பொறுத்து இரண்டாம் சீசனுக்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…