
துல்கர் சல்மானின் புதிய பட அப்டேட் : கல்யாணி பிரியதர்ஷன் ஜோடி
இந்நிலையில் இவரின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் என இரு மொழி படமாக உருவாக உள்ள இந்த புதிய படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அட்லீயின் உதவி இயக்குனர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் இப்படத்திற்கு " கோலி" என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!