நானி கோரிக்கை : முதல்வர் அளித்த பதில்
செப் 24, 2026
Advertisement
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நடித்த "தி பாரடைஸ்" படம் இன்று வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஆர்டிசி எக்ஸ் சாலைகளில் அமைந்துள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பிரிமியர் காட்சியைப் பார்க்க வேண்டுமென விரும்புவதாகவும், ரசிகர்களுடன் அமர்ந்து அவர்களது வரவேற்பைத் தெரிந்து கொள்வதும் திரைப்படங்களை நேசிக்கும் தனக்கு மிகப் பெரும் திருப்தியாக இருக்கும் என்றும், அதற்குரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாங்கள் சென்று பார்க்க, அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெலங்கானா முதல்வருக்கு கோரிக்கை வைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அளித்த பதிலில், “பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நீங்கள் மதிப்பதையும், திறமையான இளம் தெலுங்கு இயக்குனராக ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் திரைப்படத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள ஈடுபாட்டையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
கூட்டத்தை முறையாக கையாள்வதையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய, தயவு செய்து சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும், சம்பந்தப்பட்ட குழு அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, அதற்கேற்ப முடிவெடுக்கும்,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா, நானி ஆகியோர் நன்றி தெரிவித்து பதில் அளித்திருந்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஏற்பாடுகள் காரணமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதாலும் காவல்துறைக்கு மேலும் சுமையைத் தர விரும்பவில்லை என்றும், காவல் துறையின் இறுதி முடிவை நாங்கள் மதிக்கிறோம், நிலைமையை கருத்தில் கொண்டு இதைத் தவிர்ப்பதில் மகிழ்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கையைக் கேட்டதற்கும், ஆலோசனைக்கும் இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா 2" படத்தின் பிரிமியர் காட்சியின் போது அந்தக் குறிப்பிட்ட சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணமடைந்தார். அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சில மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அதன் தொடர்ச்சியாக அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்திலும், அரசியல் வட்டாரங்களிலும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!