வாழ்க்கையில் வெற்றி தோல்வி சகஜமப்பா: நாக சைதன்யா சொல்கிறார்
மே 07, 2023
Advertisement
சமீப காலமாக நாகார்ஜூனா, அவரது மகன்கள் அகில், நாக சைதன்யா படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‛கஸ்டடி" படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட நாக சைதன்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:
எப்போதும் வெற்றிகரமான படத்தை கொடுக்கவே நினைக்கிறோம். ரசிகர்களின் எல்லையில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். கடைசியாக வந்த சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. ஒரு தொழிலில் உயர்வு தாழ்வு என்பது சாதாரணமானது தான். அதன் வழியாகத்தான் நாம் பயணித்தாக வேண்டும். இதுவும் கடந்து போகும். நிச்சயமாக திரும்பி வருவோம். "கஸ்டடி" படம் மீது நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…