அண்ணன் இயக்கத்தில் தனுஷ் : நானே வருவேன் தொடங்கியது
அக் 16, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது நானே வருவேன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியே துவங்க இருந்தது. ஆனால் தனுஷின் கால்ஷீட் பிரச்சனையால் படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியே துவங்க இருந்தது. ஆனால் தனுஷின் கால்ஷீட் பிரச்சனையால் படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!