என் அம்மாவே என்னை பிளாக் செய்தார் : பாக்யஸ்ரீ போர்ஸ்
ஜூலை 29, 2026
Advertisement
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். சமீபத்தில் அகில் நடிப்பில் தெலுங்கில் வெளியான லெனின் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வெற்றிப்பட நாயகி என்கிற பெயரை பெற்றுள்ளார். தவிர தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‛சேயோன்" படத்தில் நடிக்கிறார். சினிமாவில் நுழைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை இதற்காக தன்னுடைய தாயின் எதிர்ப்பையே சம்பாதிக்க வேண்டி இருந்தது என சமீபத்திய பேட்டி ஒன்று கூறியுள்ளார் பாக்யஸ்ரீ போர்ஸ்.
சமீபத்தில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், “நான் சினிமாவில் நுழைவதில் என் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. அப்பாவும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. சகோதரியும் கூட எனக்கு எதிர்ப்பாகத்தான் இருந்தார். ஒரு கட்டத்தில் என் அம்மா என்னுடைய வாட்ஸ் அப் நம்பரையே பிளாக் செய்து ஆறு மாதம் பேசாமல் இருந்தார்.
அதற்கு காரணம் சினிமா மீது இருந்த பயம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனாலும் நான் விடாப்பிடியாக போராடி இதில் உள்ளே நுழைந்தேன். என் பெற்றோரை எல்லோரும் வியந்து பாராட்டும் அளவிற்கு அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம்” என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!