பிரியதர்ஷன் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக மாறும் மோகன்லால்
ஜூலை 29, 2021
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக எவர்கிரீன் கூட்டணியாக வலம் வருபவர்கள் நடிகர் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும். இதுவரை தான் இயக்கியுள்ள 77 படங்களில் மோகன்லாலை வைத்து மட்டுமே சுமார் 28 படங்களை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். இப்போது இவர்கள் கூட்டணியில் மிகப்பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாக்கி இருக்கும் "மரைக்கார்" படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்தநிலையில் அடுத்தததாக மீண்டும் மோகன்லாலை வைத்து கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கவுள்ளார் பிரியதர்ஷன். குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் மோகன்லால் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக தற்போதே பயிற்சி மேற்கொள்ள துவங்கிவிட்ட மோகன்லால், தனது கதாபாத்திரத்திற்காக 15 கிலோ எடையையும் குறைக்க இருக்கிறாராம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!