
அடுத்த பட பணிகளை துவங்கிய மோகன்ஜி : மீண்டும் ஹீரோவாகும் ரிச்சர்ட் ரிச்சி
ஆக 04, 2024
Advertisement
பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி தனது அடுத்த படத்தை தற்போது தொடங்கி இருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆடிப்பெருக்கு நன்னாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த படத்திற்கான வேலைகள் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி என்று பதிவிட்டு இருக்கிறார். அவரது இந்த படத்திலும் ஏற்கனவே அவர் இயக்கிய திரவுபதி, ருத்ர தாண்டவம் படங்களில் நாயகனாக நடித்த ஷாலினி அஜித்தின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷியே ஹீரோவாக நடிக்கிறார். மோகன்ஜியின புதிய அலுவலக பூஜையிலும் ரிச்சர்ட் கலந்து கொண்டார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!