எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் காலமானார்
ஜன 03, 2024
Advertisement
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரையுலகில் ஏழிசை மன்னராகத் திகழ்ந்தவர். இவரின் "பவளக்கொடி, ஹரிதாஸ்" போன்ற படங்கள் எல்லாம் ஆண்டு கணக்கில் தியேட்டர்களில் ஓடின. 1959ல் மறைந்த இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில் தற்போது இன்னொரு மகளான சுசீலாவும்(89) காலமானார். சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த சுசீலா வயதுமூப்பால் வரும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் மறைந்தார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!