குழந்தை படத்தை வெளியிட்ட மியா ஜார்ஜ்
ஜூலை 07, 2021
Advertisement
மலையாள நடிகை மியா ஜார்ஜ் 2014-ஆம் ஆண்டு வெளியான அமரகாவியம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து "இன்று நேற்று நாளை", "வெற்றிவேல்", "ஒரு நாள் கூத்து", "ரம்", "எமன்" உள்ளிட்ட படங்களில் நடித்தார். விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் "கோப்ரா" படத்திலும் மியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மியா ஜார்ஜ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரைக் கரம் பிடித்தார். சில மாதங்களுக்கு முன்பு மியா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை மியா ஜார்ஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குழந்தைக்கு லுகா ஜோசப் பிலிப் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதையடுத்து அந்தத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!