விஜய்சேதுபதியின் சால்ட் பெப்பர் லுக், சந்தீப் கிஷனின் சிக்ஸ் பேக் : வெளியானது மைக்கேல் டீசர்
அக் 21, 2022
Advertisement
புரியாத புதிர், யாருக்கும் அஞ்சேல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‛மைக்கேல்". ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்தத் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். விஜய்சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் வேடங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகிறது.
நேற்று இதன் டீசர் வெளியானது. அதிரடி ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் படமாக இது உருவாகி இருக்கிறது. விஜய்சேதுபதி விக்ரம் வேதா கெட்அப்பில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!