
அனந்தபுரம் டைரீஸ் படப்பிடிப்பை நிறைவு செய்த மீனா
இந்த படத்தில் மிகுந்த பிரச்னைகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே வழக்கறிஞராக துடிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மீனா. இப்படி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மீனா நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த படத்தை ஜெய ஜோஸ் ராஜ் என்பவர் இயக்குகிறார். வழக்கறிஞர் கதை என்றாலும் இதில் ஒரு குறிப்பிட்ட பகுதி கதை கல்லூரியில் நடைபெறும் விதமாக படமாக்கப்பட்டு உள்ளது.
இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். மேலும் நடிகர் மனோஜ் கே.ஜெயன் இதில் இன்னொரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!