
மன்மத லீலைக்கு பிரச்னை
இந்த தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்று கே.பாலச்சந்தர் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 1976ம் ஆண்டு, கலாகேந்திரா நிறுவனத்தின் பி.ஆர்.கோவிந்தராஜன், ஜே.துரைசாமி தயாரிப்பில், இயக்குநர் கே.பாலசந்தரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவானது மன்மத லீலை திரைப்படம். கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்த திரைப்படம். இந்த வருடத்தோடு வெளியாகி 46 வருடங்கள் ஆகப்போகிறது.
மன்மத லீலை என்கிற பெயரை, கலாகேந்திரா தயாரிப்பாளர்களின் அனுமதி இல்லாமல், இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு அனுமதி கொடுத்தது யார்? சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், தான் இயக்கும் திரைப்படத்திற்கு மன்மத லீலை பெயரை சூட்டி இருப்பது இயக்குநர், வெங்கட்பிரபு செய்தது தவறான செயலாகும்.
கலாகேந்திரா நிறுவனத்தார்களிடம் பேசி, அனுமதி பெறாமல், இதே பெயரில் திரையிட்டால், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கமும், தமிழ் ரசிகர்களும் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். கலாகேந்திரா நிறுவனத்தார்கள், சட்ட ரீதியாக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!