
மீம்ஸ் வரை வந்துவிட்ட மஞ்சும்மேல் பாய்ஸ்
இதனால், "மஞ்சும்மேல் பாய்ஸ்" படம் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமான கையோடு மீம்ஸ் கிரியேட்டர்களிடமும் பிரபலமாகிவிட்டது. படத்தில் இடம் பெறும் "குணா குகை" பின்னணியில் பலவிதமான மீம்ஸ்கள் தற்போது உலா வர ஆரம்பித்துவிட்டன. வழக்கம் போல மீம்ஸ் கிரியேட்டர்களின் நாயகனாக வடிவேலுதான் அந்த மீம்ஸ்களில் முக்கிய கதாபாத்திரம். அவரது நகைச்சுவை போட்டோக்களை வைத்து பலவிதமான "நக்கல், நையாண்டி, டிரோல்" கருத்துக்களுடன் மீம்ஸ்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
ஒரு படம் சினிமா ரசிகர்களைக் கடந்து எப்போது மீம்ஸ் வரை வந்துவிட்டதோ அப்போதே அந்தப் படம் பலரையும் சென்று சேர்ந்துவிட்டது என்று அர்த்தம். அது "மஞ்சும்மேல் பாய்ஸ்" குழுவினருக்கு பெருமையான ஒன்றுதான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!