மாதவன் ஜோடியாக மஞ்சு வாரியர்
மார் 11, 2021
Advertisement
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.. இருந்தாலும் தமிழில் ஒரு நீண்ட தயக்கத்துக்கு பின்னர், கடந்த 2019ல் அசுரன் படம் மூலம் நுழைந்தவருக்கு அந்தப்படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் மஞ்சு வாரியர்.
மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்து இன்று(மார்ச் 11) வெளியாகியுள்ள "தி பிரிஸ்ட்" பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியும் உள்ளார். இந்தியில் அறிமுகமாகும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனர் கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!