சமந்தாவுக்கு ஜோடியாகும் மலையாள நடிகர்
ஜன 21, 2021
Advertisement
விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கும் சமந்தா அடுத்தபடியாக தெலுங்கில் அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி உள்பட பல படங்களை இயக்கிய குணசேகரன் இயக்கும் சகுந்தலம் என்ற புராண கால காதல் கதையில் நடிக்கிறார்.
இப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவர் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் அதிதிராவ் நடித்த சுபியும் சுஜாதயும் படத்தில் நடித்தார். படத்தில் சமந்தா ஏற்றுள்ள சகுந்தலா வேடத்தில் அவரது காதலராக தேவ் மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!