
விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ
ஏப் 17, 2024
Advertisement
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளன. இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி வைத்து தனது ஒட்டுமொத்த கெட்டப்பையே மாற்றி நடித்திருக்கிறார் விக்ரம். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடக்கின்றன. இந்நிலையில் இன்று விக்ரமின் பிறந்தநாள் என்பதால் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மிகவும் ரிஸ்க் எடுத்து விக்ரம் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.
வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=W8R5u9lSqSI
வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=W8R5u9lSqSI
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!