சீனாவில் மகாராஜா முதல் நாள் வசூல்
நவ 30, 2024
Advertisement
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் கடந்த ஜுன் மாதம் வெளிவந்து, வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலைக் கடந்த படம் "மகாராஜா". இப்படம் நேற்று சீனாவில் சுமார் 30 ஆயிரம் காட்சிகளாக திரையிடப்பட்டது.
முதல் நாள் வசூலாக சுமார் 5 கோடியை வசூலித்துள்ளது. அதற்கு முன்பு நடத்தப்பட்ட பிரிமியர் காட்சிகள் மூலம் கிடைத்த 5 கோடியுடன் சேர்த்து மொத்தமாக 10 கோடி வசூலை வசூலித்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. சீன ரசிகர்களுக்குப் படம் பிடித்துள்ளதாகவும், வார இறுதி நாள் வசூல் இன்னும் அதிகம் வரும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.
சீன மீடியாக்களிலும் "மகாராஜா" படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாகவே உள்ளதாகத் தகவல். அந்த விமர்சனங்களின் காரணமாகவும் வரும் நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், படம் குறிப்பிடும்படியான வசூலைப் பெறலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!