
‛மயோன் 2 உருவாகிறது
ஜூன் 30, 2022
Advertisement
கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛மாயோன்". கோயில் பின்னணியில் புதையல் வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதை படக்குழு கொண்டாடினர். இதையடுத்து ‛மாயோன் 2" உருவாகும் என அறிவித்துள்ளனர். இதற்கான போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முதல்பாகத்தில் தொடர்ந்த கூட்டணியே இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளனர். முதல்பாகத்தில் கிருஷ்ணர் கோயில் பின்னணியில் படம் எடுத்தனர். இரண்டாம் பாகத்தில் முருகனை பின்னணியாக வைத்து படம் எடுக்க உள்ளனர். அதன்வெளிப்பாடாக படக்குழு வெளியிட்ட ‛மயோன் 2" போஸ்டரில் முருகன் சிலை, வேல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளனர். மாயோன் 2 படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!