சிறந்த புராணப்படம்: மாயோனுக்கு டொராண்டோ திரைப்பட விழாவில் விருது
செப் 17, 2022
Advertisement
கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை 47வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது. பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் இந்தியாவிலிருந்து புராணங்களுக்கான திரைப்பட பிரிவில் தமிழில் தயாரிக்கப்பட்ட "மாயோன்" திரையிடப்பட்டது. பின்னர் சிறந்த புராண படத்துக்கான விருது வழங்கப்பட்டது. டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரான இந்த படத்தில் சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்திருந்தார்கள்.
இதுகுறித்து படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்த அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது: மாயோன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்களை மகிழ்ச்சி அடைய செய்தது. தற்போது மாயோன் திரைப்படத்திற்கு "சிறந்த சர்வதேச திரைப்பட விருதினைப் பெற்றிருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தற்போது "மாயோன்" படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கியிருக்கும் எங்களுக்கு, இந்த சர்வதேச விருது புது உத்வேகத்தை அளித்திருக்கிறது. டொரன்டோ சர்வதேச திரைப்படவிழாவைத் தொடர்ந்து, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!