பிளாஷ்பேக் : வித்தியாசமாக நாயகி தேடிய இயக்குநர்
செப் 19, 2026
Advertisement
தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான ஆர்.எம்.வீரப்பனின் மகன் வி.தமிழழகன் இயக்கிய படம் "நிலாப் பெண்ணே". இப்படத்தில் திவ்ய பாரதி, ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். துணை வேடங்களில் வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜனகராஜ் ஆகியோர் நடித்தனர். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த இந்தப் படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார். 1990ம் ஆண்டு வெளியானது.
இந்த படத்திற்கான கதையை எழுதிவிட்டு நாயகி தேடினார் தமிழழகன். அவர் மனதில் இருந்த தோற்றத்துடன் யாரும் அமையவில்லை. இதனால் படத்தின் ஆர்ட் டைரக்டர் பரணியிடம் தன் மனதில் உள்ள நாயகியின் தோற்றத்தை விவரித்தார். அதை அப்படியே ஓவியமாக வரைந்தார் பரணி.
அந்த ஓவியத்தை பத்திரிகையில் வெளியிட்டு "இந்த தோற்றம் கொண்ட பெண் தேவை" என்று விளம்பரம் செய்தார். 120 பேர் விண்ணப்பித்தார்கள். அனைவரையும் அழைத்து பார்த்து அவர்களிலும் யாரும் தமிழழகனுக்கு திருப்திகரமாக அமையவில்லை.
அப்போது மும்பையை சேர்ந்த ஒரு பெண் உங்கள் ஓவியம் போல இருக்கிறார் என்று சொன்னார்கள். உடனே மும்பை சென்று அவரை சந்தித்தார். தோற்றம் சரியாக இருந்தாலும் சின்ன பெண்ணாக இருந்தார். இதனால் படத்தில் ஒப்பந்தம் செய்து விட்டு ஒரு வருடம் வரை காத்திருந்து அந்த பெண்ணை நடிக்க வைத்தார்.
அவர்தான் திவ்ய பாரதி. பின்னாளில் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து 19 வயதில் மாடியில் இருந்து விழுந்து இறந்து போனார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!