
சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக் இன்று ஆரம்பம்
“வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். சிரஞ்சீவியின் 153வது படத்திற்கு ஒரு பாடலை நிறைவு செய்துள்ளோம். சிரஞ்சீவி சார் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு பெரிய ரசிகனாக எனக்கு இது மிக சிறப்பான ஒன்று. நாளை படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. எங்கள் இயக்குனர் மோகன்ராஜாவுக்கு வாழ்த்துகள்” என அப்டேட் கொடுத்துள்ளார்.
"அலா வைகுந்தபுரம்லோ" படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்குப் பிறகு தமன் தெலுங்கில் மிகவும் பிஸியாகிவிட்டார். பாலகிருஷ்ணா நடிக்கும் "அகான்டா", நானி நடிக்கும் "டக் ஜகதீஷ்", வருண் தேஜ் நடிக்கும் "கானி", மகேஷ் பாபு நடிக்கும் "சர்க்காரு வாரி பாட்டா", பவன் கல்யாண், ராணா நடிக்கும் "அய்யப்பனும் கோஷியும்" தெலுங்கு ரீமேக், ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படம் என மிகவும் பிஸியாக இருக்கிறார்.
சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்திற்கு முதல் முறையாக இப்போது தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!