
‛லவ் ஓ லவ் படப்பிடிப்பு நிறைவு
ஏப் 30, 2026
Advertisement
நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ். தனுஷ் இயக்கிய ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த சுமாரான வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் இடம் பெற்ற கோல்டன் ஸ்பாரோ, ஏடி பாடல்கள் ஹிட்டாகின. இந்த படத்திற்கு பிறகு " லவ் ஓ லவ்" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார் பவிஷ். இதை அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நாக துர்கா என்பவர் அறிமுகமாகிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது என அறிவித்துள்ளனர். காதல் கதையில் இப்படம் உருவாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!