லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆக 21, 2025
Advertisement
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி". இப்படம் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
ஆனால், அறிவித்தபடி அந்தப் படம் வராது என்று கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள மற்றொரு படமான "டூயுட்" படத்தை அக்டோபர் மாதம் வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் அக்டோபர் 17ம் தேதியன்று "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தை வெளியிட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்கள். ஒரே மாதத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.
"டூயுட்" படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாகத்தான் அறிவித்துள்ளார்கள். ஆனால், தேதியை இன்னும் சொல்லவில்லை. அப்டோபர் 20ம் தேதி தீபாவளி வர உள்ளது. "டூட்" படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பார்களா அல்லது ஏற்கெனவே அறிவித்தபடி அக்டோபர் மாதத்தில் வெளியிடுவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…