
கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன்
சந்தானம் சின்னத்திரையில் நடித்து வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பயணித்தவர் காமெடி நடிகர் மாறன். அதன் பிறகு சினிமாவில் இவர் நடித்தாலும் கூட பெரும்பாலும் அது சந்தானத்தின் படங்களாக மட்டுமே இருந்து வந்தது. சமீபகாலமாக தான் ஜே பேபி உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர நடிப்பை இவர் வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் கூலி படத்தின் துவக்கத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் விதமாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் மாறன் நடித்திருந்தது அவரது நடிப்பை ரசிக்கும் பலருக்கும் ஆச்சரியம் தருவதாக இருந்தது.
குறிப்பாக இந்த படத்தில் யோகிபாபு போன்ற ஒரு முன்னணி நகைச்சுவை நடிகருக்கு பதிலாக, ரஜினியின் நண்பர் போல இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் மாறன் நடித்துள்ளார். நகைச்சுவை, சென்டிமென்ட் மற்றும் கிளைமாக்ஸில் கொஞ்சம் ஆக்சன் காட்சிகள் என அவர் இந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மாறனை நோக்கி பல இயக்குனர்களின் பார்வை திரும்பும் என்றும் நல்ல வாய்ப்புகள் அவரை தேடி வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!