ராம் சரணை இயக்கும் லோகேஷ்
ஜூலை 21, 2022
Advertisement
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றியை கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனால் இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி பிற மொழி நடிகர்களும் இவரது படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இவர் கைவசம் ‛‛விஜய் 67, கைதி 2, விக்ரம் 2"" என அடுத்தடுத்து படங்கள் வைத்துள்ளார். தற்போது விஜய் 67 படத்தை இயக்க அதற்கான பணிகளை துவக்கி உள்ளார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் ‛‛ராம் சரண் உடன் ஒரு படம் பிரமாண்டமாய் உருவாக உள்ளது. தற்போது நாங்கள் இருவருமே இரண்டு, மூன்று படங்கள் கைவசம் வைத்துள்ளோம். அவைகள் முடிந்ததும் நாங்கள் இணைவோம்"" என கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!