2023க்கு இப்போதே புக் செய்யப்பட்ட லோகேஷ் கனகராஜ்
ஜூன் 14, 2021
Advertisement
சினிமாவில் ஒரு இயக்குனரோ, நடிகரோ பெரிய வெற்றி ஒன்றைக் கொடுத்துவிட்டால் அவர்களை உடனடியாக தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள்.
இப்போது நடிகர்கள் கூட கிடைத்துவிடுகிறார்கள், ஆனால், ஹிட் படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களைப் பிடிப்பது அரிதாகி வருகிறது. அந்த விதத்தில் அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
"விக்ரம்" படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை தற்போது பரபரப்பாகச் செய்து வருகிறார் லோகேஷ். இப்படத்தை முடித்ததும் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். அதற்குப் பிறகு தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்காக லோகேஷை இப்போதே ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
அப்படத்தை 2023ம் ஆண்டில்தான் தயாரிக்கப் போவதாகத் தகவல். ஆனாலும், ஒரு பெரும் தொகையை அட்வான்ஸ் ஆகக் கொடுத்து விட்டார்களாம். அந்தத் தயாரிப்பு நிறுவனம் இது போல ஐந்தாறு இயக்குனர்களை ஒப்பந்தம் செய்துள்ளது கூடுதல் தகவல்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!